தாய்வானுக்கு இராணுவ உதவி ஒப்புதல் அளித்தது அமெரிக்கா!

தாய்வான் அமெரிக்காவிடம் விடுத்த விண்ணப்பத்தின் அடிப்படையிலும், அமெரிக்கா தாய்வானுக்கு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல் கட்டமாகவும் சுமார் 108 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான இராணுவ தளபாடங்களை கையளிக்க தீர்மானித்திருப்பதாக வொஷிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா தொடர்ந்தும் தாய்வான் மீது கண் வைத்து, தாய்வானை கையகப்படுத்தும் மறைமுக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தாய்வானின் இராணுவ கட்டமைப்புக்கள் அபிவிருத்தியடையாத நிலையில் காணப்படுவது சீனாவிற்கு அதிக சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் அமெரிக்கா நவீன ஆயுத தளபாடங்களை வழங்கி கட்டமைப்புக்களை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் குறித்து அமெரிக்க அதிகாரி கருத்து தெரிவிக்கும் போது,

“தாய்வானில் சீனாவின் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. தாய்வானின் அனுமதியின்றி சீனா உட்பிரவேசிக்க முடியாது. சீனா தொடர்ந்தும் தொந்தரவு செய்யுமாயின் அமெரிக்கா தனது படைகளையும் தாய்வானுக்கு அனுப்புவதில் ஆச்சரியமில்லை” என தெரிவித்திருக்கின்றார்.

இதேவேளை சீனா ஏற்கனவே அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிப்பு விடுத்து இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply