மொட்டுக் கட்சிக்குள் சலசலப்பு; ஜீ.எல் பீரிஸை நீக்க திட்டம்?

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைக்கு மத்தியில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை நீக்க கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதில் கட்சியின் உத்தியோகபூர்வ கருத்துக்கு புறம்பாக டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதே கூறியமையே இதற்குக் காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சியாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply