கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பான அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
அந்த அறிக்கை தனக்கு கடந்த வாரம் தனக்கு கிடைத்ததாக அவர் மேலும் கூறினார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பிரேத பரிசோதனையின் போது, கூர்மையற்ற ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களால் இந்த மரணம் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதேவேளை, கைதிகளை மேற்படி சந்தேகநபர்கள் கொடூரமாக தாக்கியதாக சந்தேகிக்கப்படும் மூங்கில் மற்றும் மின்சார வயர் என்பனவும் மையத்தில் வைத்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதுடன், இவை நீதிமன்றில் சாட்சியமாக சமர்ப்பிக்கப்பட்டன.
கடந்த மாதம் 29ஆம் திகதி இடம் சம்பவத்தில் பதுளை – தெமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் மரணித்தார்.
அவரது இளைய சகோதரர் மற்றும் நண்பர்கள் மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது.
பிறசெய்திகள்



