
கொழும்பு, ஜூலை 15
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகளுக்காக 3 நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
இதன்படி ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.



