மீண்டும் பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

கோட்டபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்த நிலையில் இன்றையதினம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்த்தன தலைமையில் பாராளுமன்ற விசேட அமர்வு நடைபெற்றது.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply