என் மகனைப் போல் இனியொருவர் உயிரிழப்பதற்குள் முடிவை எட்டுங்கள் -கண்­ணீர்ப் புகைக்­குண்­டால் உயி­ரி­ழந்­த­வ­ரின் தந்தை கத­றல்

நாட்­டின் பொரு­ளா­தார நெருக்­க­டிக்­குள் சிக்­குண்டு தொழிலை இழந்து ஒரு­வேளை உண­வின்­றிய நிலை­யி­லேயே அர­சாங்­கத்­துக்கு எதி­ரான போராட்­டக்­க­ளத்­தில் எனது மக­னும் கலந்­து­கொண்­டான் என அண்­மை­யில் கண்­ணீர்ப் புகைக்­குண்டு தாக்­கு­த­லுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்த இளை­ஞ­ரின் தந்தை கண்­ணீர் மல்­கத் தெரி­வித்­துள்­ளார்.

அவர் மேலும் கூறு­கை­யில்,

மஹவ தல­தா­க­ம­வில் வாடகை வீட்­டில் வசித்­து­வ­ரும் எனது மக­னுக்கு திரு­ம­ண­மாகி ஒரு கைக்­கு­ழந்தை உண்டு. முச்­சக்­க­ரண்டி வைத்து தனது அன்­றாட வாழ்வை ஓட்­டுக்­கின்­றான். தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி அவ­ரது வாழ்வை சீர்­கு­லைத்­துள்­ளது. முச்­சக்­க­ர­வண்­டிக்கு எரி­பொ­ருளை பெற நான்­கைந்து நாள்­கள் வரி­சை­யில் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது.

அத­னால் அன்­றாட வரு­மா­னம் கேள்­விக்­கு­றி­யான நிலை­யில் ஒரு­வேளை உண­வின்றி மனைவி குழந்­தைக்கு பால்மா இல்­லாது ஏற்­பட்ட மன­அ­ழுத்­தத்­தா­லேயே எனது மகன் அர­சுக்கு எதி­ரான போராட்­டத்­தில் கலந்­து­கொண்­டான்.

இந்த நிலை­யில் கடந்த 13ஆம் திகதி பிர­த­மர் அலு­வ­ல­கத்­துக்கு அரு­கில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் கண்­ணீர்ப் புகைக்­குண்­டுத் தாக்குதலுக்கு இலக்­காகி மருத்­து­வ­மனை­யில் சேர்த்­த­போ­தும் அவன் உயி­ரி­ழந்­து­விட்­டான்.

இன்று நாட்டு மக்­கள் எனது மக­னைப் போல அன்­றாட வரு­மா­ன­மில்­லா­மல் அழுத்­தத்­தை­யும் வேத­னை­யை­யும் சுமக்­கின்­ற­னர். நாட்­டின் உய­ரிய பத­வி­க­ளில் இருப்­போர் மக்­கள் படும் துன்­பங்­க­ளைக் கண்­டு­கொள்­வ­தில்லை.

அவர்­க­ளுக்கு அதி­கா­ரம் மட்­டுமே தேவை. அப்­பாவி மக்­க­ளின் உயிர்­கள் பறி­போ­வது பற்றி அக்­க­றை­கொள்­வ­தில்லை. மக்­க­ளின் குர­லுக்கு செவி­சாய்க்­காத ஆட்­சி­யா­ளர்­க­ளால் ஒரு நாட்­டுக்கு எந்தப் பய­னும் இல்லை. மக்­கள் உயி­ரோடு விளை­யா­டா­தீர்­கள்.

பாவம் மக்­கள். மக்­கள் படும் துன்­பத்­தைக் கண்டு மகன் மிக­வும் அதிர்ச்­சி­ய­டைந்­தான். இன்று நம் மக்­கள் எண்­ணெய் மற்­றும் எரி­வாயு வரி­சை­யில் நிற்­கி­றார்­கள். இது நிறுத்­தப்­பட வேண்­டும். இன்று என் மகன் போல் நாளை இன்­னொ­ரு­வர் உயி­ரைக் கொடுப்­ப­தற்கு முன் தற்­போ­துள்ள பிரச்­சி­னைக்கு முடிவு காணுங்­கள் –என்­றார்.

Leave a Reply