எதிரிகளுக்கும் அடைக்கலம் வழங்க தயார்! எம்.எம் .மஹ்தி

எதிரிகளையும் இன்முகத்துடன் வரவேற்பதே இஸ்லாம் காட்டிக் கொடுத்த வழிமுறையாகும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் .மஹ்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று (16) அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இன,மத பேதங்களின்றி சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த நாட்டு மக்களிடையே அரசியல் சுய இலாபத்திற்காக இன மத குரோதங்களை ஏற்படுத்தி முஸ்லீம்களை எதிரிகளாகக் காட்டி அதில் ராஜபக்சர்கள் வெற்றியும் கண்டனர்.

முஸ்லிம்களின் பொருளாதாரம், சொத்துக்கள், உயிர்கள் என பல்வேறு அழிவுகளையும் ஏற்படுத்தி இன, மத வெறுப்பின் உக்கிரத்தால் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரிக்கவும் முனைந்தனர்.

இவ்வாறான நிலையில் முஸ்லீம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட அக்கொடூரங்களின் சூத்திரதாரியான ஜனாதிபதி கோட்டபாய, இன்று அரபு தேசங்களே தஞ்சம் வழங்கி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக் காட்டுகின்றேன்.

Leave a Reply