இந்திய பாதுகாப்புத்துறைக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பத்துறைக்கும் இடையில் சுமார் 375 மில்லியன் பெறுமதியிலான இராணுவ ஒப்பந்தம் இடம்பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் இரு நாடுகளுக்கிடையிலும் மிகவும் நெருக்கமான உறவு கட்டியெழுப்பப்படவுள்ளதாகவும் இருநாட்டு அரசாங்கங்களும் மேற்படி ஒப்பந்தங்களை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரமோஸ் போர் விமானத்தின் முதல் கொள்வனவினை பிலிப்பைன்ஸ் மேற்கொண்டிருந்ததாகவும் இந்த பிரமோஸ் கொள்வனவு தான் இவ்வாறான பாரிய முதலீட்டு ஒப்பந்தத்திற்கு வழிகோலியதாக பிலிப்பைன்ஸ் பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த புதிய ஒப்பந்தம் மூலம் பிலிப்பைன்ஸ் இராணுவத்தை நவீன மயப்படுத்த முடியும் எனவும், புதிய இராணுவ அபிவிருத்திகளை மேற் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்தோ பசுபிக் பிராந்தியங்களுக்கிடையிலான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்தை இந்தியா செலுத்துவதற்கு இந்த உறவு மிகுந்த சாதக தன்மையை ஏற்படுத்திக் கொடுக்ம் என இந்திய பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பிறசெய்திகள்



