எரிபொருள் வரிசையில் திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

அநுராதபுரம் – கெக்கிராவ – இபலோகம லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மயங்கி விழுந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபரொருவரே இவ்வாறு நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் அவுக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் எரிபொருள் பெறுவதற்காக தனது நண்பருடன் சென்று வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கெக்கிராவ வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கெக்கிராவ – இபலோகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த நபர் முச்சக்கரவண்டி சாரதி என கூறப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply