உதிர்கின்றன இலைகள் – ரணகளத்தில் அ.தி.மு.க.

அ.தி.மு.க.விலி­ருந்து எடப்­பாடி பழ­னி­ சாமி உள்­ளிட்ட 22 பேர் நீக்­கப்­ப­டு­கின்­ற­னர் என ஓ.பன்­னீர்­செல்­வம் அறி­வித்­துள்­ளார். அ.தி.மு.க. தற்­போது ஓ.பி.எஸ். , இ.பி.எஸ். என இரு அணி­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றன.

சென்னை வான­க­ரத்­தில் கடந்த 11-ஆம் திகதி நடந்த அ.தி.மு.க. பொதுக்­குழுக் கூட்­டத்­தில், இடைக்­கால பொதுச்­செ­ய­லா­ள­ராக எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வு­செய்­யப்­பட்­டார். அத­னை­ய­டுத்து கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வம் உள்­ளிட்ட அவ­ரது 18 ஆத­ர­வா­ளர்­களை கட்­சி­யி­லி­ருந்து எடப்­பாடி பழ­னி­சாமி அதி­ர­டி­யாக நீக்­கி­னார்.

அதற்கு, பதி­ல­டி­யாக எம்மை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­ய­மை­யா­னது செல்­லு­ப­டி­யற்­றது. கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் என்ற முறை­யில் எடப்­பாடி பழ­னிச்­சாமி உள்­ளிட்ட 22 பேர் நீக்­கப்­ப­டு­கின்­ற­னர் என ஓ.பி.எஸ். அறி­வித்­துள்­ளார்.

கட்­சிக்கு களங்­க­மும், அவப்­பெ­ய­ரும் உண்­டாக்­கும் விதத்­தில் செயற்­பட்­ட­தால் அவர்­கள் நீக்­கப்­ப­டு­கின்­ற­னர் என­வும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ச–இ)

Leave a Reply