
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை சீராக்குவதற்கு இணையத்தளம் மூலம் டிஜிற்றல் எரிபொருள் அட்டையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்துகொள்ளலாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு ஒரு வாகனம் என்ற ரீதியில் பதிவு செய்யப்படும்.
தேசிய அடையாள அட்டை, வாகன உரிம எண் மற்றும் வாகன எண் ஆகிய விவரங்களை உறுதிப்படுத்தி குறியீடு (QR இலக்கம்) ஒன்று மக்களுக்கு வழங்கப்படும்.
அதற்கமைய குறியீடு மற்றும் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இரு இலக்கங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வாரத்தில் இரு நாள்கள் எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய,
01) வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
02) ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்துக்கு எரிபொருள்.
03) வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும்.
04) வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாள்ளுக்கு எரிபொருள் விநியோகம்
உங்களுடைய விவரங்களை பதிவு செய்த பின்பு Registration Successful என திரையில் தோன்றும்.
அதில் உங்களுக்குரிய QR இலக்கம் மற்றும் வாராந்த ஒதுக்கீடு மற்றும் மிகுதி போன்ற விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்.



