யாழில் கறுப்புச் சந்தையை இல்லாமல் ஒழிக்க வேண்டும் – அரச அதிபர் கருத்து!

வட மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையம் அங்குரார்ப்பண நிகழ்வு சற்றுமுன் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட அரச அதிபர்,

எனக்கு 500 அழைப்புகள் நாள் ஒன்றுக்கு வருகிறது. எரிபொருள் பிரச்சனை காரணமாக. எல்லாவற்றையும் இயன்றவரை சீர் செய்து வருகின்றேன். ஒரு விநியோக திட்டத்தை நாம் ஆரம்பித்தால், பல பிரச்சனைகள் வருகிறது.நிலையாக அதை நாம் பேண முடியவில்லை.

யாழில் எரிபொருள் விநியோகம் நாளுக்கு நாள் மாறுபட்டு செல்கிறது. நாம் எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்துவது இல்லை. எரிபொருள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் இணைந்து வேலை செய்கின்றோம்.

பெற்றோலுக்கு மட்டுமே காட் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டீசலுக்கு காட் முறமை இல்லை. பிரதேச செயலகங்கள் ஊடக டீசல் விநியோகத்தை முறைமை படுத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையம் இந்த விநியோகத்தை சீர் செய்ய உதவி செய்ய வேண்டும்.எல்லோருக்கும் எரிபொருள் முக்கியம்.

இது தவிர கறுப்பு சந்தையை நாம் இல்லாமல் ஒழிக்க வேண்டும். ஒரு தட்டுப்பாடு வந்தால் இவ்வாறு கறுப்பு சந்தைகள் உருவாகுவது வழமை. விநியோகம் சீரானால் எல்லாமே சரியாகும்.

பிறசெய்திகள்

Leave a Reply