ஜனாதிபதியின் பதவி விலகலை தொடர்ந்து தற்போது போட்டிக்காக ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசாநாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, சஜித் பிரேமதாசா,சரத் பொன்சேகா என பலர் போட்டியிட உள்ள நிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க போகின்றது? ஏதேனும் நிபந்தனைகளை விதிக்கவிருக்கின்றதா? என கேள்வி எழுந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திரு.எம்.ஏ.சுமந்திரன் பா.உ அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு 19ம் திகதி முடிவடைந்த பின்னரே எந்தவிதமான முடிவும் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply