
மூதூர் பிரதேச செயலகத்தினால் எரிபொருள் வழங்கும் முறை முறைமைப்படுத்தப்பட்டது.
திருகோணமலை மாவட்ட செயலாளரின் பணிப்புரைக்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக்கின் வழிகாட்டுதலுக்கு அமைய மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கொண்டு Notion software ஊடாக எரிபொருள் வழங்கும் முறை முறைமைபடுத்தபட்டுள்ளது.
தோப்பூர் உப பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய வகையில் பொது மக்கள் பயனடையும் முகமாக தோப்பூர் MPCS ஊடாகவும் பெற்றோல் வழங்கப்படுகின்றது.
குறித்த திட்டத்தின் ஊடாக பொது மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்கான எரிபொருட்களை முறையாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்



