
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபரிடமிருந்து 18 துவிச்சகரவண்டிகள் முழுமையாகவும் உதிரிப்பாகங்களாகவும் கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர் துவிச்சக்கர வண்டிகளைத் திருடி அவற்றை உதிரிப்பாகங்களாக்கி விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் மேலதிக விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



