வட மாகாண எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இணையம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் , எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் சார்பாக, அரச அதிபரிடம் 12 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அவையாவன ;
1.எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அரச திணைக்களங்களோடு இணைந்து செயற்பட தயாராக வேண்டும்.
2.எந்தவொரு அரச திணைக்கள கோரிக்கையும் மாவட்டச் செயலகம் ஊடாகவே வழங்கப்பட வேண்டும்.
3.அரச உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடியவர்களாவே இருக்க வேண்டும்.
4.போலீஸ் மற்றும் முப்படையினர் அரச துறை என அனைவரினது தனிப்பட்ட கோரிக்கைகள் அழுத்தங்களாக பிரயோகிக்கக்கூடாது.
5.சகல பிரதேசங்களிலும் எரிபொருள் பங்கீட்டு அட்டையின் பதிவிலே வழங்க வேண்டும்.
6.எரிபொருள் வழங்கும் அளவு மாகாண முழுமைக்கும் ,சகல துறையினருக்கும் அவர்களது பணிகளுக்கு ஏற்றவாறு ஒரே அளவில் பங்கீடப்பட வேண்டும்.
7.எரிபொருள் வழங்கப்படும் நாள்,நேரம் மாகாணம் முழுதும் ஒரே மாதிரி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
8.எரிபொருள் வழங்குவதற்கான நேரம் அட்டவணை தயாரிக்கப்பட வேண்டும்.
9.ஒரு தடவை இறக்கப்படும் எரிபொருளில் 600 லீற்றர் உரிமையாளர்கள் ,பணியாளர்கள் ,மாற்று இதர தேவைகளுக்கு பயன்படுத்தலாம்.
10.பெற்றோலியக்கூட்டுத்தாபனம் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
11.எரிபொருள் அளவீட்டுச் சோதனை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
12.எரிபொருள் கொள்வனவிற்கு பழைய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
பிறசெய்திகள்



