அமரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.

ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நிகர்ப் பெறுதிக் கணக்கீட்டிலேயே, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டொலருக்கான நிகர்ப் பெறுமதி மட்டுமல்லாமல், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், யென் மற்றும் இந்திய ரூபாவுக்கான இலங்கை ரூபாவின் நிகர்ப் பெறுமதிகளும் சரிந்துள்ளன.

நாட்டில் கடந்த வாரம் உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவியது. அது இந்த வாரமும் பூதாகரமாகத் தொடர்ந்தது. இந்த அரசியல் உறுதியற்ற நிலைமை ரூபாவின் பெறுமதி சர்வதேச பண அலகுகளுடன் ஒப்பிடுகையில் மேலும் வீழ்ச்சியடைவதற்குக் காரணமானது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply