நாட்டில் தற்போது பேசுபொருளாக காணப்படுகின்ற இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்புகளிடையே தொடர் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (16) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தலைமையில் சமகி ஜன பலவேக மற்றும் சமகி ஜன சந்தன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கூடியது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடப் போவதாக முன்னதாக அறிவித்ததுடன், சமகி ஜன பலவேக மற்றும் சமகி ஜன சந்தான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அந்த தீர்மானம் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகளுடன் மேலும் பல கலந்துரையாடல்கள் இன்று நடைபெறவுள்ளன.




பிறசெய்திகள்
- தமிழ் – முஸ்லிம் கட்சிகள் எனக்கே ஆதரவு! – சஜித் நம்பிக்கை
- உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை கையளித்தது அமெரிக்கா
- ஐரோப்பாவில் வரலாறு காணாத காலநிலை மாற்றம்
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka



