கோட்டா நாட்டை விட்டுத் தப்பியது எப்படி?-அதிர்ச்சி தகவல் வெளியானது!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்ற மக்களின் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டங்களை அடுத்து கடந்த 14ம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபாய ராஜபக்ச விலகினார்.

இவ்வாறான நிலையில் காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோட்டபாய எவ்வாறு வெளியேறினார் மற்றும் எவ்வாறு நாட்டை விட்டு சென்றார் என்பது தொடர்பில்தொடர்பில் தென்னிலங்கையில் அதிக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவர், கோட்டபாய தப்பியோடிமை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது கடந்த 9ஆம் திகதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பெரிதாக இருக்கும் என கோட்டாபய எண்ணியிருக்கவில்லை. அதனை இராணுவத்தினர் சமாளித்து விடுவார்கள் என்று நம்பியிருந்தார்.

இருப்பினும் நிலைமை வேறு விதமாக இருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் வாசலை உடைக்க தொடங்கினார்கள். அதனை பின்னரே மாளிகையில் இருந்து வெளியேற கோட்டபாய திட்டமிட்டார்.

கையில் கிடைத்த நான்கு பைகளுடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறினார் என அவர் தெரிவித்துள்ளார்.

மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதை ஊடாக, கொழும்பு துறைமுகம் சென்றடைந்த கோட்டாபய, அங்கு தயாராக இருந்த கப்பல்கள் மூலம் தப்பிச் சென்றார் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக, குறித்த கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும் உத்தரவுக்கு அமைய தமது பணிகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply