
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயணத்தடை எதிர்வரும் 28ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை இடம்பெற்றது.
இதன்போதே குறித்த இருவருக்கும் 28ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பிறசெய்திகள்



