ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு தமிழ் பெண் நியமனம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் மேனகா மூக்காண்டி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ்ப் பிரிவு பொறுப்பதிகாரியாகவும் பிரதிப் பணிப்பாளராக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

நுகேகொடை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான மேனகா மூக்காண்டி, இலங்கை இதழியல் கல்லூரியில், துறைசார் கல்வியைக் கற்றவராவார்.

15 வருட கால தனது ஊடக வாழ்வில் சிறந்த ஊடகவியலாளராகவும் செய்தி ஆசிரியராகவும் திறம்படக் கடமையாற்றியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக மேனகா மூக்காண்டி நியமனம் பெறுவதற்கு முன்னர் கொழும்பு பத்திரிகை ஒன்றின் செய்தி ஆசிரியராகக் கடமையாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply