
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.அதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான , திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஒவ்வொருவருடனும் கலந்துரையாடப்படும்.
அதன்படி ஒவ்வொரு வேட்பாளர்களின் தனிப்பட்ட திட்டத்தை பரிசீலித்து இறுதியாக ஒருவர் அறிவிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்



