கப்பல் வந்தாலும் எரிபொருள் விநியோகிக்கப்படாது – அமைச்சரின் அறிவிப்பு

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்தாலும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இன்று முதல் எரிசத்தி அமைச்சின் உத்தியோகபூர்வ,இணையத்தளத்துடன் இணைக்கப்பட்ட தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply