
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீனாவினால் ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி கல்வி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சீன உணவு உதவி திட்டத்தின் கீழ் இந்த அரிசி இலங்கைக்கு வழங்கப்படுகிறது.
குறித்த திட்டத்தின் , இரண்டாம் கட்ட அரிசி தொகுதி பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் 9 மாகாணங்களுக்கு உட்பட்ட 11 இலட்சம் மாணவர்களுக்காக ஒரு நேர போசாக்கான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது.
இந்தச் செயற்பாடானது மாணவர்களுக்கு வழங்கப்படும் விசேட உதவி என இலங்கைக்கான சீன தூதுவர் சிங்ஹொங் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்



