புத்தளம், அனுராதபுரம் வீதி, அளுத்கம 18 ஆம் மைல்கல் பிரதேசத்தில் நேற்று மாலை விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து பணியாற்றிவந்த, சாலியவெள பளுகஸ்ஸேகம பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஆர்.எம்.சமன் அருணப்பிரிய என்பவரே விபத்தில் உயிரிழந்தார்.
மேலும், இவர் கடமையை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது கப்ரக வாகனம் ஒன்று இவர் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியின் சாரதி தப்பி சென்றுள்ளார் என்றும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன், கப்ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதுதொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




