மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மல்லிகைத்தீவு பகுதியில் வைத்து, பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேரூந்து பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணி ஒருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

நீலாப்பொல பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற மூதூர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான அரச பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிறசெய்திகள்

