
ஆட்சியில் நடுநிலை வகிப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை, எதிர்த்து நிக்க வேண்டும், இல்லையேல் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை நிஷாந்தன் தெரிவித்துள்ளார் .
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
மேலும் அவர் இது பற்றி தெரிவிக்கையில்,
அண்மையில் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினை காரணமாக ஜனாதிபதி கோட்டாபாய கடந்த சில தினங்களுக்கு முன்பாக மக்களின் தன்னாட்சி போராட்டத்தின் விளைவாக பதவி விலகி இருந்தார்.
இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். அதன் பின்னர் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் சபாநாயகரினால் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டினுடைய ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை கட்சிகளின் முக்கியஸ்தர்களும் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் பெரமுன கட்சியில் இரண்டு வகையான கதைகள் வந்து கொண்டுள்ளன, ஒரு சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாகவும், மற்றையவர்கள் டலஸ் அழகப்பெருமானை ஆதரிப்பதாகவும் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அடுத்தபடியாக சஜித் பிரேமதாஸ வேட்புமனுத் தாக்கல் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வருகின்ற 19ஆம் திகதி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உடைய மூன்று கட்சிகளும் கூடி முடிவெடுப்பதாக கூறியிருக்கின்றார்கள்
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியில் இருந்து விக்னேஷ் கூட்ட நிலைப்பாட்டை அவர் நேற்றய தினங்களில் ஊடாக அமர்வில் அறிய தந்திருந்தார். தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை ஏற்றால் நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். இல்லையேல், நடுநிலை வகிக்கும் என தெரிவித்திருந்தார்.
அது உண்மையில் சரியான விடயமாக எமக்கு தெரியவில்லை, ஒன்று நாம் எதிர்த்து நிற்க வேண்டும் இல்லையேல் ஆள வேண்டும். நடுநிலை வகிப்பது என்பது அன்றுதொட்டு இன்றுவரை சரியான முடிவாக தமிழ் மக்களுக்கு அமைவதில்லை, இதில் அதிகளவு பாதிப்பிற்கு உள்ளாவது தமிழ் மக்களே.
தமிழ் பண்பாட்டு பேரவையின் அம்சமாக தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் பத்து கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளோம்.
அவையாவன,
- சிறிலங்கா அரசினால் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
02 சிறிலங்கா ராணுவத்தாலும், ஒட்டுக்குழுக்கலாளும் கடத்தி காணாமலாக்கப்பட்ட எம் தமிழ் உறவுகள் மற்றும் சிறிலங்கா ராணுவத்திடம் வலிந்து கையளிக்கப்பட்ட எமது போராளிகள், பொதுமக்கள் ஆகியோர் தற்பொழுது எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்று நீதியான முறையில் பொறுப்பு கூறவேண்டும்.
3.பல தசாப்தங்களாக தமிழர்களை அடக்கி, ஒடுக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.
04.சிறிலங்கா அரசினாலும், அரச இயந்திரங்களினாலும் தமிழர் தாயகப் பகுதியில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் பௌத்த மத அடையாளங்களை உருவாக்கும் செயற்பாடுகளை உடனும் நிறுத்துவதோடு நிறுவப்பட்ட பெளத்த மத அடையாளங்களை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- தமிழர் தாயகத்தில் உள்ள எமது மக்களின் பூர்வீக காணிகளை சிறிலங்கா அரசு கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்துவதோடு கையகப்படுத்திய காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட வடகிழக்கில் அதிகமான ராணுவம் நிலைகொண்டுள்ளது. எனவே மேலதிகமாக காணப்படும் ராணுவத்தை எமது பகுதியைவிட்டு வெளியேற்றுவதற்கானதுரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழர் தாயகத்தில் அரசியல், சமூக செயற்பாடுகளை முன்னெடுக்கும் தமிழ் செயற்பாட்டாளர்கள் மீது சிறிலங்கா புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை உடனும் நிறுத்தி செயற்பாட்டாளர்கள் முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- ஊடகவியலாளர்கள் மீது சிறிலங்கா ராணுவம் மற்றும் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களை உடனும் நிறுத்தி எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் சுயாதீனமாக, சுதந்திரமாக, பாதுகாப்பாக செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
- வடகிழக்கு தமிழர் பகுதியில் எமது இளைஞர், யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்றவகையில் பெரியளவிலான தொழிற்சாலைகளை விரைவில் நிறுவுவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
- நீண்ட காலமாக நடாத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்படி கோரிக்கைகளை சிறிலங்கா அரசிடம் இருந்து எழுத்து மூலமான உத்தரவை அனைத்து தமிழ் கட்சிகளும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சிறிலங்கா அரசின் வாய்மூல உத்தரவுகளை நம்பி ஏமாறும் போக்கிற்கு அனைத்து தமிழ்கட்சியினரும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.- என தெரிவித்தார்.
பிறசெய்திகள்

