கப்பலில் இருந்து டீசலை தரையிறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

கொழும்பு,ஜுலை 16

40 ஆயிரம் மெட்ரிக் டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் நேற்று நாட்டுக்கு வருகைதந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கப்பலில் இருந்து டீசலை தரையிரக்கும் நடவடிக்கைகள் ஆரம்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேற்று முன்தினம் ஒரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தேசிய எரிபொருள் அனுமதி பத்திரம் விநியோகிக்கப்படும்  நிலையில், அதன் நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில்  எரிபொருள் விநியோகம இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோல் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளை அல்லது நாளை மறுநாள் நாட்டுக்கு வரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துளளது.

Leave a Reply