ரணில் ஜனாதிபதியானால் தேசியபட்டியல் எம்பியாக ரூவன்

கொழும்பு,ஜீலை 16

எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவுக்கான தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வெற்றிடமாகும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ருவான் விஜயவர்தனவை முன்னிறுத்துவது தொடர்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சி செயற்குழுவின் இணக்கப்பாட்டுடனேயே அவர் நியமனம் செய்யப்படவுள்ளார் என கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன. தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்படும் பட்சத்தில்  அவருக்கு அமைச்சு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply