வன்முறைச் சம்பவங்களால் சொத்துக்களை இழந்த பெரமுன எம்.பிக்கள்! ரணில் வழங்கியுள்ள உறுதி

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளையும் மீளக் கட்டுவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை தீர்மானம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில், தொலைபேசிகள் ஊடாக தொடர்பு கொண்டு அவ்வப்பொழுது அவர்களுக்கு இதனை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடுகளை அழித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும், தனது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் பதில் ஜனாதிபதி மேலும் அறிவித்துள்ளார்.

அழிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறையில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உட்பட கிட்டத்தட்ட எண்பது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply