கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வெளி மாவட்ட வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்கு செல்லும் மக்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெருக்கடி காரணமாக வெளி மாவட்ட வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்லமுடியாத நிலை ஏற்படுமானால், உடனடியாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையுடன் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம்
கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையுடன் தொடர்புகொள்கின்ற போது மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின் அவ்வாறனவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும், ஏனையவர்களுக்கு போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தாம் தயாராக இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply