தனது வயோதிப தாயை தலையில் உலக்கையால் தாக்கி மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று ( 17) பதிவாகியுள்ளது.
பொரளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேஸ்லைன் மாவத்தை – சிங்கஹ புர தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
38 வயதான மகளே இவ்வாறு தனது 65 வயது தாயை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் 38 வயது மகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான குறித்த மகளும், கொலை செய்யப்பட்ட தாயும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்ததாக கூறும் பொலிஸார், சந்தேக நபரின் 6 வயது மகளை 65 வயதான தனது தாய் தாக்கியமையை மையப்படுத்தி, 38 வயது மகளால் தாய் மீது உலக்கையால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள 38 வயதான மகள், மன நல பாதிப்பு தொடர்பில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக் கொண்ட நிலையில், ஒரு சில தினங்களுக்கு முன்னரேயே வீடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பிறசெய்திகள்

