வரையறையின்றி எரிபொருள்; நாளை முதல் வழமைக்கு திரும்பும் தனியார் பஸ் சேவைகள்!

தனியார் பஸ்கள் நாளை (18) முதல் வழமை போல் சேவையில் ஈடுபடும்.

வரையறையற்ற வகையில் தனியார் பஸகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும் என அகில இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கு வரையறையற்ற வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளதால் நாளை முதல் தனியார் பஸ்கள் வழமை போல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply