மே-09 வன்முறைச் சம்பவம்- 03 பேர் கைது!

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேக நபர்களில் இருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மொத்த சந்தேக நபர்களின் எண்ணிக்கை 3,215 ஆகவும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் எண்ணிக்கை 1,176 ஆக காணப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply