கார் விபத்தில் சிக்கிய தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை!

இன்று மாலை புத்தள – வெல்லவாய வீதியில் புத்தல புருத சந்தியில் வேகமாக வந்த வேன் மோதியதில் 32 வயதான கர்ப்பிணித் தாயும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்ணும் அவரது 37 வயது கணவரும் வீதியோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது வேன் அவர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் புத்தல குடாஓயாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள்.

விபத்தை அடுத்து வேனின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், பின்னர் அவர் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் ஓட்டுநரின் இடது கால் துண்டிக்கப்பட்டு செயற்கை காலுடன் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

பிறசெய்திகள்

Leave a Reply