
கொழும்பு, ஜுலை 18
நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 10.20 முதல் மாலை 6.30 வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், CC வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், M, N, O, X, Y மற்றும் 3 மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

