நெல்லியடி மாலு சந்தியில் 7 பேரை மோதித்தள்ளிய வாகனம் சாரதி இன்றியா பயணித்தது என படுகாயமடைந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் தெரியவருகையில்,
சட்ட விரோதமாக மணல் ஏற்றி கன்டர் ரக வாகனம் ஒன்றை கடந்த 15 ஆம் திகதி அதிகாலை பொலிசார் விரட்டிய நிலையில், நெல்லியடி மாலு சந்தியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் சப்பை ரத உற்சவ தினத்தன்று ஆலய சூழலில் நின்ற 7 பேரை மோதித்தள்ளிய கன்டர் வாகனம் தப்பியோடியது.
இவ்வாறு தப்பிய வாகனம் மோதியதில் காயமடைந்த 7 பேரில் இருவர் மிகவும் மோசமாக படுகாயமடைந்தமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த வாகனத்தின் உரிமையாளரையோ அல்லது விபத்து இடம்பெற்ற சமயம் வாகனத்தை செலுத்தியவரையோ பொலிசார் இதுவரை கைது செய்யாது வெறுமனே சாரதி அற்ற வாகனத்தை கைப்பற்றி பொலிஸ் நிலைத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
வெறும் வாகனத்தை தடுத்து வைத்திருப்பதன் மூலம் சாரதியை அல்லது தப்ப விட முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது.
ஏனெனில் நாம் அறிந்த வரையில் இந்த வாகனத்தின் உரிமையாளரும் ஓர் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து இடம்பெற்ற சமயம் வாகனத்தை செலுத்தியது பொலிஸ் உத்தியோகத்தரின் உடன் பிறந்த சகோதரன் ஆகும்.
அவ்வாறு இருக்கும்போது சக பொலிசாரே சட்டப்படியான குற்றவாளி என்பதனால் பொலிசார் காப்பாற்ற அல்லது வழக்கை திசை திருப்புகின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது எனத் தெரிவிக்கின்றனர்.
பிறசெய்திகள்

