21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் – அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு!

<!–

21ம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் – அதுவரையில் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என அறிவிப்பு! – Athavan News

எதிர்வரும் 21ம் திகதி முதல் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, அதுவரை வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என மக்களிடம் அந்தக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறைமைக்கு அமைய, வாகனங்களை வைத்திருப்போர்  fuelpass.gov.lk  என்ற இணைத்தளத்துக்கு பிரவேசித்து தேசிய எரிபொருள் அட்டைக்காக பதிவுசெய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.


Leave a Reply