
பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதல் சூழ்நிலையின் போது இரண்டு T56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 10 வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தின் போது அங்கு கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 13 ஆம் திகதி இரவு, ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதுடன், அப்போது இராணுவத்தினர் இருவர் மயக்கமடைந்து தாக்கப்பட்டு அவர்களிடமிருந்த இரண்டு T-56 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன.
இரண்டு வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறசெய்திகள்

