50 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் ஆர்ப்பாட்டக்காரர் கைது

50 கண்ணீர் புகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய ஒபேசேகரபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற மோதலின் போது இந்த வெடிபொருட்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் கைகளில் சிக்கியிருந்தன.

குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை காஷ்யபபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் இன்று (18) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பிறசெய்திகள்

Leave a Reply