புதிய ஜனாதிபதி – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இதன்படி, எதிர்வரும் 20ம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply