தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தைபெறுவதற்காக 10 இலட்சம் பேர் வெற்றிகரமாக தமது பதிவுகளை செய்துள்ளனர் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி
அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளை பெறுவதற்காக இணையம் மூலம் அனுமதிப் பத்திரம் பெறும் முறைமைநேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
நேற்று மாலைக்குள் 10 இலட்சம் பேர்பதிவுகளை மேற் கொண்டுள்ளனர். பல வாகனங்களை கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் ஒரே தடவையில் முழுவாகனங்களையும் பதிவு செய்யும் நடைமுறை அடுத்த சில நாட்களில் மேம்படுத்தப் படும் என்று அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
சரிபார்க்கப்பட்ட பின்ன ஒவ்வொருவாகனத்துக்கும் கியூ. ஆர். குறியீடு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிறசெய்திகள்

