ஜனாதிபதி பதவிக்காக ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது தொடர்பான கட்சியின் தீர்மானம் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அனுப்பியுள்ள கடிதத்திற்கு விரைவில் பதில் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை தமது கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்குவது, தமது கட்சியின் பெரும்பான்மையானோரின் நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்

