உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்- வழக்கறிஞர் ஜெனரல் பதவி நீக்கம்!

இரண்டு சக்திவாய்ந்த அமைப்புகளில் பல தேசத்துரோக வழக்குகளை மேற்கோள் காட்டி, ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஜெனரலை நீக்கியுள்ளார்.

60க்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் இப்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு எதிராக மொத்தம் 651 ஒத்துழைப்பு மற்றும் தேசத்துரோக வழக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

பணிநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளான, இவான் பகானோவ் மற்றும் இரினா வெனெடிக்டோவா ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

Leave a Reply