சிபெட்கோ…

சிபெட்கோ பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மீண்டும் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் பதிவு இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் பிரகாரம் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கலந்துரையாடலில், ஜூலை 19 ஆம் திகதி பெற்றோல் சரக்குகளை இறக்கிய பின்னர், எரிபொருள் விநியோகத்தை தொடங்குவதற்கான தற்காலிக திகதியாக ஜூலை 21 ஆம் திகதியை அமைச்சர் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், நடைமுறைக்கு வரும் திகதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply