கிளிநொச்சியில் நெல்லுக்கு ஏற்பட்ட சிக்கல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் ‘ நெல்லினை சேமித்து வைக்க முடியாத நிலையில் விவசா யிகள் உள்ளனர் என அக்கராயன் நாகதம்பிரான் கமக்கார அமைப்பின் தலைவர் சி.கனக சபாபதி தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்ததாவது ;

கடந்த இரண்டாண்டுகளாக யூரியா உரத்தினை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர் . தற்போதைய சிறுபோகத்தி ற்குக் கூட நகைகளை அடைவு வைத்தே பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர் .

யூரியா இல்லாத காரண த்தினால் விளைச்சல் பாதி க்கப்பட்டுள்ளது . இந்நிலையில் அறுவடை செய்யப்படும் நெல் உடனடியாக விற்பனை செய் தால்தான் கடன்களை செலுத்த முடியும் . உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் வீட்டில் நெல்லினை வைத்துக் கொண்டு கடன் களை செலுத்த முடியாது .

அரசு மருந்துகள் , யூரியா போன்றவ ற்றினை எதிர்காலத்தில் குறை ந்த விலையில் விவசாயிகளு க்குக் கிடைக்கப் பெற்றால்தான் விவசாய முயற்சிகள் பயனு ள்ளதாக அமையும் . தற்போது கூட எரிபொருள் நெருக்கடியினால் கிளிநொச்சி மாவட்டத்தின் சிறுபோக அறு வடையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேலும் தெரிவித்தனர் .

பிறசெய்திகள்

Leave a Reply