திட்டமிட்ட நாடகம் மூலம் ரணில் ஜனாதிபதி ஆவார்!

பதில் ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகம் ஒன்றை அரங்கேற்றி எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க மணலில் குளவி சுழலும் காலத்தை கடந்து செல்கின்றார். 2019ஆம் ஆண்டுநடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த கொள்கைகளால் அவரும் அவரின் கட்சியினரும் படுதோல்வி அடைந்தனர்.

ஓர் ஆசனம்கூட கிடைக்காமல் அவரும் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது.

தனி ஒரு மனிதனாக ரணில் விக்கிரமசிங்க அந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தவாறு தற்போது அரசியலில் விளையாடுகின்றார்.

மே 9 அன்று ‘கோட்டா கோ கம’ கிராமத்தின் மீதான தாக்குதலின் எதிர்வினையாக, பல அமைச்சர்கள் மற்றுமஅமைச்சர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. அதன் விளைவாக பொதுஜன பெரமுன அரசின் ஒரே மீட்பராக ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார்.

ரணிலுக்கு பிரதமர் பதவி கொடுக்க எங்களுக்கு பைத்தியமா என்று கூச்சலிட்ட அமைச்சர்கள் பின்னர் அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என்று அறிவித்தனர். அரசுடன் ரணில் இணைந்தது பிரதமராக இருப்பதற்கு அல்ல. ஜனாதிபதியாக வருவதற்காகவே.

அவர் பிரதமர் பதவியை ஏற்றவுடனேயே ‘கோட்டா கோ கம’ கிராமத்துக்கு வசதிகள் செய்து தர ஒரு குழுவையும் நியமித்தார். கட்சி சார்பற்ற செயல்பாட்டாளர்கள், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றும் வல்லமை படைத்தவர்கள் என்பதை அவர் எப்போதும் அறிந்திருந்தார்.

அமைச்சர்களின் வீடுகளை எரித்ததன் பின்விளைவாக அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, இப்போது தனது பூர்வீக வீட்டை எரித்ததன் பிரதிபலனாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

ரணிலின் பாதை வரைபடத்தின்படி எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால்தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.

வீதிப் போராளிகள் எடுக்கும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் பாதை வரைபடம் தீர்மானிக்கப்படும். கடந்த
9ஆம் திகதி கொழும்பில் இரண்டாவது தடவையாக வீசிய பொதுமக்களின் சுனாமி அலை ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த தடையையும் அழித்தபோது கோட்டாபய ராஜபக்ஷ தனது பையில் சிக்கியதை மாத்திரம் எடுத்துக்கொண்டு துறைமுகத்திற்கு தப்பிச் செல்ல வேண்டியிருந்தது.

கடைசி நேரத்தில் அவருக்கு உதவ கடற்படைக்கு சொந்தமான கப்பல் வந்தது.
நாடு எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தின் ஊடாக முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துமாறு இளையோர்கள் கோருகின்றனர்.

அதையும் தாண்டி, ஓர்அமைப்பு மாற்றத்தை, அமைப்பில் மாற்றத்தை உருவாக்குவது எதிர்கால அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் பாதை வரைபடத்தை பின்பற்றத் தவறினால், அவரும் இந்து சமுத்திரத்தில் குதிக்க வேண்டியிருக்கும் – என்று சிங்கள வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply