புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம் – மனோ கணேசன்!

<!–

புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம் – மனோ கணேசன்! – Athavan News

ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை மாலை 6 மணிக்கு கட்சி செயலகத்தில் ஒன்றுகூடவுள்ளது.

இதன்போதே, எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply