நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் பால் மா உள்ளிட்ட பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.
இவ்வாறான நிலையில்யாழ் . மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ( யாழ்கோ ) ஒரு லீற்றர் பசும் பாலின் விற்பனை விலையை , கடந்த வெள்ளிக்கிழமை முதல் 30 ரூபாவினால் அதிகரித்துள்ளது .
மேற்படி சங்கத்தின் கிளைகளில் பசும்பால் ஒரு லீற்றர் 140 ரூபா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் , கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒரு லீற்றர் பாலின் விலை 170 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது .
இந்த விலை அதிகரிப்பானது பசும்பாலினை வழங்கும் கால் நடைப்பண்ணையாளர்களின் கால்நடைத்தீவனத்தின் விலை மற்றும் பராமரிப்புச் செலவின் அதிகரிப்புக்களினால் ஏற்படும் பால் உற்பத்திச் செலவின் அதிகரிப்பினால் ஏற்படும் நெருக்கடியினைக் குறைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக , யாழ்கோவின் இயக்குனர் சபை தெரிவித்தது .
குறித்த விலை அதிகரிப்பினையடுத்து , பால் வழங்குனர்களிடமிருந்து ஒரு லீற்றர் பசும் பாலினை 145 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும் , ஏற்கனவே ஒரு லீற்றர் பால் 122 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நிலையில் , தற்போதைய கொள்வனவு விலை அதிகரிப்பினால் பால் வழங்குநர்கள் ஒரு லீற்றருக்கு மேலதிகமாக 23 ரூபா வீதம் பெறமுடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது .
பிறசெய்திகள்

