வெள்ளரிப்பழ சீசன் யாழில் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் வெள்ளரிப்பழ சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது.

பனையோலைக் குடலையில் வெள்ளரிப்பழத்தைச் கட்டியபடி சைக்கிள்களில் வியாபாரம் செய்வோரைப் பரவலாகக் காண முடிகிறது.

சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பிரதேசத்தில் மானாவாரி கால வயல் அறுவடையைத் தொடர்ந்து தை மாத பின்னாளில் வெள்ளரி விதைகளை நடுவது வழக்கம். ஆடி மாதத்தில் வெள்ளரிக் கொடிகளில் பழங்களைப் பிடுங்கி வியாபாரிகளிடம் விற்பார்கள்.

அவர்கள் சைக்கிள்இ மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். ஒரு வெள்ளரிப்பழம் 200 ரூபா முதல் கொண்டு பலவிலைகளில் விற்பனையாகி வருகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply